Friday 5 July 2013

அழகப்பா பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு:



                      காரைக்குடி அழகப்பா பல்கலை தொலை நிலை கல்வி, 2013 மே மாதத்திற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை பிரிவில் பி.லிட்.,(தமிழ்), பி.பி.எம்., முதுநிலை பிரிவில், எம்.., (தமிழ், எஜூகேஷன்,
சோஷியாலஜி, வரலாறு), எம். பி.., (பொது - செமஸ்டர் அன்ட் நான் செமஸ்டர், ஹியுமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், கார்ப்பரேட் மேனேஜ்மென்ட், கார்ப்பரேட் செக்கரட்டரிஷிப், 5 வருடம்), எம். எஸ்.சி., (விலங்கியல், சாப்ட்வேர் இன்ஜினியரிங்) பி.ஜி., டிப்ளமோ பிரிவில், பி.ஜி.டி. (ஹெச். ஆர். எம்., ஹெச்..,), சான்றிதழ் பிரிவில் சுய உதவிக்குழு மேலாண்மைக்கான தேர்வு முடிவுகள்www.alagappauniversity.ac.in,www.kalvimalar.com என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. முடிவு வெளியான 10 நாட்களுக்குள் (15.7.2013-க்குள்) மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மறு மதிப்பீட்டிற்கான, விண்ணப்பம் பல்கலைகழக இணையதளத்தின் மூலம் பெற்று, மறு மதிப்பீட்டு கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ.400 வரைவோலை, (பதிவாளர், அழகப்பா பல்கலை கழகம், காரைக்குடி) செலுத்தி,தேர்வுப் பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு, அழகப்பா பல்கலை தேர்வாணையர் உதய சூரியன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment