Sunday, 11 August 2013

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு: முதல்வருக்கு 10 ஆயிரம் பேர் கடிதம்

ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் அதனடிப்படையிலான பணி நியமனத்தில்இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும்10 ஆயிரம் பேர்முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்துபொதுப்
பள்ளிக்கான மாநில மேடைபொதுச் செயலர்,பிரின்ஸ் கஜேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில்டி.ஆர்.பி.,நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில்அனைத்து பிரிவினருக்கும் தேர்ச்சி விகிதம்60 சதவீதம் எனநிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்பழங்குடியினர்மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு,இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்அரசு,மதிப்பெண் தளர்வு வழங்கலாம் எனதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருந்தும் இப்பிரிவினருக்குமதிப்பெண் தளர்வு வழங்கவில்லை.

                       இது இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானதுஆசிரியர் தகுதித் தேர்வு என்பது அரசு வேலைக்கான தேர்வு மட்டும் அல்ல. இதில் தேர்ச்சி பெற்றால் தான்தனியார் பள்ளிகளிலும் வேலை செய்ய முடியும். மதிப்பெண் தளர்வு வழங்காததுஒடுக்கப்பட்ட மக்களின் வேலைவாய்ப்பை தட்டி பறிக்கும் செயல். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது. எனவேதமிழகத்தில் பின்பற்றப்படும்69 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில்ஆசிரியர் தகுதித் தேர்வில்மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும். அதற்கான ஆணையைதமிழ் நாடு ஆசிரியர் தேர்வாணையத்திற்குஅரசு பிறப்பிக்க வேண்டும். கடந்த 2012அக்டோபரில்அரசு வெளியிட்டஅரசாணை252ல்,இடஒதுக்கீட்டின் அடிப்படையில்தகுதியை நிர்ணயிக்காததால்,இந்த அரசாணை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. மத்திய அரசு கூடதன் அலுவலக குறிப்புகளில்இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் எனகூறுகிறது. எனவேஎல்லா வகையிலும்முரணாக உள்ளஇந்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும் எனஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும்10 ஆயிரம் பேர்,முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரன் கூறினார்

No comments:

Post a Comment