Saturday, 10 August 2013

பி.எட். மதிப்பெண் குளறுபடி: சரிசெய்து வெளியிட்டது பல்கலைக்கழகம்


            பி.எட். மதிப்பெண் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சரிசெய்து பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பி.எட். தேர்வு
முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு எழுதியவர்களில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் தேர்வில் பங்கேற்றபோதும் சில பாடங்களில் "ஆப்சென்ட்' போடப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் முறையிட்டனர். இதையடுத்து பட்டியல் சரிசெய்யப்பட்டது.

                 இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறியது: தேர்வு எழுதியவர்களில் சிலர் பாட குறியீடுகளை மாற்றி போட்டதாலும், தேர்வு எண்ணை முழுமையாக எழுதாததாலும் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது. இப்போது தவறுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு, சரியான மதிப்பெண் பட்டியல் பல்கலைக்கழக இணையதளமானwww.tnteu.in -ல் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment