Friday, 20 September 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்



            மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆண்டுதோறும்
ஜனவரி மற்றும் ஜூலையில் அறிவிக்கப்படும்இந்நிலையில் தற்போது 80 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி இனி 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியம் பெறும் 30 லட்சம் பேரும் பலனடைவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக 10 ஆயிரத்து 879 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும். இதையடுத்து அடுத்த வாரத்தில் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்விற்கான அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment