திருப்பூர் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கணினி மையங்களிலேயே கட்டண அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கணினி மையங்களில் வாக்காளர்
பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவம் 6 இ, 7இ, 8இ, 8ஏ போன்றவற்றை குறைந்த செலவில் விரைவாகவும், எளிதாகவும் மனு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அலைச்சலும், கால விரயமும் மக்களுக்குத் தவிர்க்கப்படும். விண்ணப்பித்த மனுவின் நடவடிக்கை விபரத்தையும் இந்த மையங்கள் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் இருப்பிட முகவரி மாற்றம் செய்ய, இணையதளம் மூலம் புகார் பதிவு செய்திட தனித்தனியாக விண்ணப்பித்திட வேண்டும். ஒரு சேவைக்கு கட்டணம் ரூ.10 வசூலிக்கப்படும். இது தவிர வாக்காளர் பட்டியல் அச்சிட்டுத் தருவதற்கு ஒரு பக்கத்திற்கு ரூ.3 வசூலிக்கப்படும். பட்டியலில் வாக்காளர் பெயர், வாக்குச்சாவடி மையங்களின் பெயர், கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் புகார் நிலை குறித்து அறிவதற்கு ரூ.3 வசூலிக்கப்படும்.தேடிய முடிவுகளை நகலாக அச்சிட்டுத் தருவதற்கு ரூ.2 வசூலிக்கப்படும்.
No comments:
Post a Comment