Sunday, 22 September 2013

கவுரவ ஆசிரியர்களுக்கு கிடைத்தது சம்பளம்


             "அரசுக் கல்லூரிகளில் 2வது "ஷிப்ட்" கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்து, சம்பளம் வழங்க" உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 59 அரசுக் கல்லூரிகளில் 2வது "ஷிப்ட்"ல் 1,661 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு,
கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. நடப்பு கல்வி ஆண்டிற்கான பணி நியமன உத்தரவும் வழங்கவில்லை. இதுகுறித்து, அரசுக்கு பல முறை கவுரவ விரிவுரையாளர் சங்கத்தினர் மூலம் கோரிக்கை வைத்தனர். விரிவுரையாளர்கள் நிலை குறித்தும், "தினமலர்" நாளிதழ் செய்தி வெளியிட்டது.
உத்தரவு

                     இதன் எதிரொலியாக, 2 வது "ஷிப்ட்"ல், 2013-14 க்கு கவுரவ விரிவுரையாளரை நியமிக்க அரசு உத்தரவிட்டது. சம்பளம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க 16.61 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. கவுரவ விரிவுரையாளர் (தகுதிநிலை) சங்க மாநில செயலாளர் மகாராஜன் கூறுகையில், "எங்கள் கோரிக்கையை ஏற்று, பணி நியமனம் மற்றும் சம்பளம் வழங்கி உத்தரவிட்ட அரசுக்கு நன்றி," என்றார்.

No comments:

Post a Comment