Monday 30 September 2013

பணிப்படி வழங்கவில்லையென்றால் தேர்தல் பணிகள் புறக்கணிப்போம்


                       ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்குரிய படி வழங்கப்படாததால் தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகளை புறக்கணிக்கப் போவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். தேர்தல் கமிஷன் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர் சேர்ப்பு, வாக்காளர் பட்டியலில் திருத்தம்,
இடமாற்றம் போன்ற பணிகளை செய்ய முடிவு செய்து அப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான ஆசிரியர் கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் ராமகிருஷ்ணன் தாலுகா அலுவலகத்தில் நடத்தினார். அப்போது 2010லிருந்து 4 ஆண்டுகளாக ஆண்டிற்கு 10 தினங்கள் மொத்தம் 40 தினங்கள் தேர்தல் பணி ஆற்றியுள்ளோம்.

                              இதுவரை இதற்கான படி வழங்கப்படவில்லை. எனவே தேர்தல் பணியை புறக்கணிக்கப் போகிறோம் என்று கூறினர். மீட்டிங்கில் பங்கேற்க மாட்டோம் என்றும் குரல் கொடுத்தனர். தாசில்தார் ராமகிருஷ்ணன் உடனடியாக பென்டிங் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்ததால் மீட்டிங்கில் கலந்து கொண்டு தேர்தல் பணி ஆற்ற சம்மதித்தனர்.

No comments:

Post a Comment