Monday 23 September 2013

பொதுமக்களின் கியாஸ் இணைப்பு, குடிநீர் இணைப்பு, திருமண பதிவு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதார் அடையாள அட்டைகளை கட்டாயமாக்கக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.


         ஆதார் அட்டை-மத்திய அரசும்பல்வேறு மாநில அரசுகளும் திருமணங்களைப் பதிவுசெய்தல்சம்பள பட்டுவாடாசேமநலநிதி,கியாஸ்குடிநீர் இணைப்பு போன்ற சேவைகளுக்கு பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும் என்பதை
கட்டாயமாக்கி இருந்தன. இந்த நடைமுறையை நீக்கக்கோரியும்ஆதார் அட்டை வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரியும் கர்நாடக ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி புட்டாசாமிசுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தார்.
அடிப்படை உரிமைகளை மீறுவது
                       ஆதார் திட்டம் அரசியல் சாசனப்படி மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். இந்தத் திட்டம் தன்னிச்சையானது என்று அரசு சொன்னாலும் நடைமுறையில் அப்படி நடந்து கொள்ளவில்லை. சமீபத்தில்மராட்டிய அரசு திருமணத்தைப் பதிவு செய்ய இருதரப்பும் ஆதார் அடையாள அட்டையைக் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இது வரம்பை மீறும் செயலாகும். சமநீதியின் அடிப்படையில் கோர்ட்டு இதனை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மனுதாரர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கட்டாயப்படுத்தக் கூடாது
                       இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் எஸ்..பாப்டே ஆகியோர் திருமண பதிவுகியாஸ்குடிநீர்மின்சார இணைப்புகள்சேமநலநிதிசம்பள பட்டுவாடா போன்ற எந்த அத்தியாவசிய சேவைகளுக்கும் ஆதார் அடையாள அட்டையை மத்தியமாநில அரசுகள் கட்டாயப்படுத்தக் கூடாது. சட்டத்துக்குப் புறம்பாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு இந்த ஆதார் அடையாள அட்டைகளை வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
ரூ.50 ஆயிரம் கோடி செலவு
                        இதுவரை இந்த ஆதார் அடையாள அட்டை விநியோகிக்கும் திட்டத்துக்காக ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும் பொருளாதார ரீதியாக அடித்தளத்தில் இருக்கும் குடிமக்களுக்கு ஒரு அடையாளத்தை வழங்கும் வண்ணம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்ற அரசின் வாதத்தை கோர்ட்டு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கோருவதை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுஇதுகுறித்து மத்தியமாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கியத்துவம் வாய்ந்தது

                     நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அடையாள அட்டை என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய முக்கியமான திட்டமாகும். சமீபகாலமாக அத்தியாவசிய சேவைகளான சமையல் வாயு இணைப்புவங்கி கணக்கு தொடங்குதல் போன்றவற்றுக்கு ஆதார் அடையாள அட்டை சில இடங்களில் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment