Tuesday, 24 September 2013

அறிவியல் கண்டுபிடிப்பிற்கு தங்கப்பதக்கம்: அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை



            தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பழநியை சேர்ந்த மாணவர்கள் இருவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். பழநி அருகே .வேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
எட்டாம் வகுப்பு மாணவன் தினேஷ்குமார். இவரது படைப்பான சூரிய ஒளியில் இருந்து சுடுநீர் தயாரிப்பது, சூரிய ஒளி மூலம் நீரை தூய்மைப்படுத்துவது ஆகியவற்றிற்கு மாநில அளவில் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. மாணவனுக்கு வழிகாட்டியாக ஆசியர் சூரியபிரகாஷ் இருந்தார்.பழநி அருகே காவலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் வீரகுமார். இவர், ஆழ்குழாய் கிணற்றுக்குள் குழந்தைகள் விழுந்துவிட்டால் இதை மீட்பது குறித்து தனது கண்டுபிடிப்பை மாநில போட்டியில் வெளிப்படுத்தினர். இவருக்கும் முதல்பரிசாக தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இவருக்கு வழிகாட்டியாக ஆசிரியர் விக்டர் சாமுவேல் இருந்தார்.மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ், மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் சிவானந்தம் பாராட்டினர்.மாணவர்கள் இருவரும் தேசிய அளவில் டெல்லியின் அக்., 8, 9, 10 ஆகிய தினங்களில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

No comments:

Post a Comment