Monday 30 September 2013

தகுதி,பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வுக்காக ஆசிரியர்கள் தவிப்பு


                      போதிய தகுதிபணி மூப்பு இருந்தும் பதவி உயர்வு,தேர்வு புறக்கணிப்புபணப்பலனின்றி 6,875 ஆசிரியர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில்கடந்த 2003-04 கல்வி ஆண்டில் டி.ஆர்.பி.மூலம், தொகுப்பூதிய அடிப்படையில்பட்டதாரி 5,377 முதுநிலை பட்டதாரி 1,498 உட்பட இடைநிலை ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டனர். 2006 ஜூனில் பணி நிரந்தரமாகினர். தொகுப்பூதியத்தில்இருந்த 2 ஆண்டுகளை "சர்வீஸ் பட்டியலில் சேர்க்காமல்10 ஆண்டுகள் பணி முடிக்கவில்லை என்ற காரணத்தை கூறிதேர்வுநிலை (செலக்ஷன் கிரேடு) பதவி உயர்வு வழங்க மறுக்கின்றனர். இதனால்தேர்வு கண்காணிப்பாளர்துறை அலுவலர் பணிகள் வழங்காமல் புறக்கணிக்கப்படுவதாகபாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

            பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி சூசை கூறுகையில்,"" 2005-06ல் இடைநிலை ஆசிரியராகிபதவி உயர்வு மூலம் முன்னிலையில் உள்ளனர். உரிய தகுதிபணி மூப்பு இருந்தும்2ஆண்டுகள் தொகுப்பூதிய காலத்தை அரசு சேர்க்காமல் விட்டதால்பதவி உயர்வு கேள்விகுறியானது. பங்களிப்பு பென்ஷனிலும்,பாதிக்கப்பட்டுபதவி உயர்வுபணப்பலன்களை இழந்து வருகிறோம்,'' என்றார்.

No comments:

Post a Comment