Wednesday 25 September 2013



        மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை விட தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு சுமார் 9 ஆயிரம்ரூபாய் வரை குறைவாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக இடைநிலை ஆசிரியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதுபோன்று வித்தியாசம் வேறு எங்கும் இல்லாத நிலையில் தமிழகத்தில் மட்டும் இதுபோன்ற நிலை இருப்பது இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் சம்பளத்தை தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு இன்னும் அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர் மறியல் போராட்டம் நடக்கிறது. மத்திய அரசுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதிதேர்வினை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய முறையிலான பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் வழங்கும் தொகையை12 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடக்கிறது.  ஐந்து நாள் மறியலிலிலும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.இந்த மறியல் போராட்டத்திற்கு பின்னரும் இடைநிலை ஆசிரியர்கள் சம்பளத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment