Sunday, 1 September 2013

விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி ஊதிய உயர்வு.


              மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள
அறிக்கையில்விரைவில்  மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%
அகவிலைப்படி ஊதிய உயர்வு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவையிடமிருந்து பெறுவதற்கான நடைமுறைகளில் நிதியமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும்முப்பது லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். அகவிலைப்படி உயர்வு,ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிகிறது. அடிப்படை சம்பளம் நீங்கலாக இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இதுவரை 80சதவிகிதமாக வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படிஇந்த உயர்வின் மூல் 90 சதவிகிதமாக உயரும். இதற்கு முன் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி சதவிகித அகவிலைப்படி உயர்வு உயர்த்தி வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment