Tuesday, 3 September 2013

தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கான ஆட்களை தேர்வு செய்வதற்க்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியது. தமிழகம் முழுவதும், 10,500 பேர், இப்பணிக்காக தேர்வு செய்யப்படுகின்றனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அக்., 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

                         தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கான ஆட்களை தேர்வு செய்வதற்கு, விண்ணப்ப வினியோகம், துவங்கியது. "தமிழகத்தில் போலீசாருக்கு உதவியாக,
"தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைஉருவாக்கப்படும்இதன் மூலம், 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும். ஆண்டுக்கு, 10 ஆயிரம் பேர், தேர்வு செய்யப்படுவர்' என, கடந்தாண்டு, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்அறிவிப்பை தொடர்ந்து, அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும், 10,500 பேர், இப்பணிக்காக தேர்வு செய்யப்படுகின்றனர். இப்படையில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று முதல் துவங்கியது

                          மாநகர்களில், மாநகர கமிஷனர் அலுவலகங்களிலும், மாவட்டங்களில், எஸ்.பி., அலுவலகங்களிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இளைஞர்கள் பலர், ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பெற்று சென்றனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அக்., 1ம் தேதிக்குள், வாங்கிய இடத்திலேயே வழங்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment