Thursday, 5 September 2013

மேகாலயத்தில் 14,000 ஆசிரியர்கள் விடுப்பு போராட்டம்


               கோரிக்கைகளை செவிமடுக்க மறுக்கும் மாநில அரசைக் கண்டித்து, மேகாலயாவில் செவ்வாய்க்கிழமை 14,000 ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 4047 பள்ளிகள் பாதிக்கப்பட்டன.
தங்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிப்பதற்குகூட மாநில அரசு முன்வராததால் இந்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டதாக மேகாலயாவின் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடைபெறும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என கூட்டமைப்பின் தலைவர் நாங்சியாங் கூறினார்.

                     மாநில அரசு பிடிவாதப் போக்கைத் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். ஒட்டுமொத்த விடுப்புப் போராட்டத்தைத் தெடார்ந்து, வரும் 4 ஆம் தேதி தர்னா போராட்டமும், செப்.5ஆம் தேதி ஆசிரியர் தினத்தை புறக்கணிக்கவும் முடிவு செய்யப்படுள்ளதாக அந்தக் கூட்டமைப்பு மேலும் தெரிவிக்கிறது. இந்தப் போராட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment