Thursday, 5 September 2013

2009க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இனி மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்



               இதுகுறித்து SSTAன் பொதுச்செயலாளர் திரு.இராபர்ட் கூறுகையில்மாவட்ட மாறுதலில் இனி வரும் காலங்களில் எல்லா இடைநிலை ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம்.நான்கு ஆண்டுகளாக கண்ட கனவு பலித்தது.உச்சநீதிமன்றத்தில் இன்று  நடைபெற்ற
விசாரணையில் இடைக்கால உத்தரவில் உள்ள 2009க்குப் பிறகு பணி நியமனம் பெற்ற சுமார் 17000 இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதலில்  செல்லக்கூடாதென இருந்த  தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நம்முடைய தீரா தாகத்தை தீர்த்தது என்றும்மேலும் இந்த வழக்கு வெற்றிபெற உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்

No comments:

Post a Comment