Sunday 15 September 2013

செப்டம்பர்/அக்டோபர் 2013, மேல்நிலைத் துணைப் பொதுத் தேர்வெழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத்தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ‘சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அரசு தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


            மேல்நிலைத் தேர்விற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான அறிவுரைகளை tndge.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி தனித்தேர்வர்கள் தமது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ்
தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் tndge.in என்ற இணையதளத்தில் 16.09.2013 ( திங்கட்கிழமை) மற்றும் 17.09.2013 ( செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்துகொள்ள வேண்டும். 17.09.2013 மாலை மணி 05.00-க்குப் பிறகு விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலாது. தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் முழுமையாக விவரங்களைப் பதிவு செய்து தமது புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும். பிறகு, புகைப்படத்துடன் பதிவு செய்த விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தினையும், தேர்வுக்கட்டணத்தினை பணமாகச் செலுத்த வேண்டிய பதிவுச் சீட்டினையும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
                        `
எச்வகை தேர்வர்கள் ஒரு பாடத்திற்கு - ரூ.50 + (இதர கட்டணம் ரூ.35/-)‘எச்.பிவகை தேர்வர்கள் - ரூ.150 + 37 = ரூ.187/-ம் இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000/-த்தை செலுத்த வேண்டும். தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய கட்டணத் தொகை Registration Slip-ல் குறிப்பிடப்பட்டிருக்கும். கட்டணத்தினை பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். ஆன்-லைனில் புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை (Confirmation copy), Registration Slip மற்றும் உரிய இணைப்புகளுடன் தனித்தேர்வர்கள் 18.09.2013 (புதன்கிழமை) அன்று சென்னையில் அமைந்துள்ள கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளியில் நேரில் சமர்ப்பிக்கவேண்டும்.

மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி

(Presidency Girls Hr.Sec.School)

எழும்பூர், சென்னை 600 008.


                        தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் இறுதியாகப் பெற்ற தனித்தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய Print out-ல், மீண்டும் தனித்தேர்வரின் அதே மாதிரியான புகைப்படத்தினை ஒட்ட வேண்டும். புகைப்படத்தில் attestation பெற வேண்டிய அவசியமில்லை. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களுக்கும் சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு மதிப்பெண் சான்றிதழ் அனுப்பும் பொருட்டு விண்ணப்பத்துடன் ரூ.40/-ற்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறை ஒன்றினை இணைக்க வேண்டும்.
                       
இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவுரைகளின்படி வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறதுதபால் மற்றும் தனியார் கொரியர் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்று அரசு தேர்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது
.

No comments:

Post a Comment