Thursday 12 September 2013

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமலாக்குக! செப்.20 ஓய்வூதியர் கூட்டமைப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்


                       புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவிற்கு நாடாளு மன்றம் ஒப்புதல் வழங்கி யதைக் கண்டித்து செப்டம் பர் 20 அன்று தமிழகம் முழு வதும் பெருந்திரள் ஆர்ப் பாட்டம் நடத்திட தமிழ் நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின்
கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.இதுதொடர்பாக கூட்ட மைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்திய பொருளாதார நெருக்கடியினை சமாளிக்க வும், இந்திய நாணயத்தின் மதிப்பை நிலைநாட்டவும் நாடு முழுவதும் நிதி சீர் திருத்தம் என்ற பெயரால் பல்வேறு மக்கள் விரோத மான மசோதாக்களை நாடாளுமன்றம் நிறை வேற்றியுள்ளது. அதில் ஒன்றுதான் இந்திய தொழி லாளி, உழைப்பாளி, மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறு வன ஊழியர்களின் சேமிப்பு நிதியை அந்நிய, உள்நாட்டு நிறுவனங்களால் சூரை யாட வழிவகுக்கும் தேசிய ஓய்வூதிய திட்டம் என்ற பெயரால் புதிய ஓய்வூதிய திட்டத்தை நாடாளுமன்ற இரு அவைகளும் திமுக வுடன் இணைந்த காங் கிரஸ் கூட்டணியும், பாஜக வும் இணைந்து இடது சாரிக் கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ், அதிமுக, சமாஜ் வாதி கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சட்ட மாவதற்கு ஒப்புதல் அளித் துள்ளன.
                        இதனால் இந்தியா விடு தலை அடைவதற்கு முன் நடைமுறைப்படுத்தி வந்த ஓய்வூதிய திட்டம் ஒரு முடி வுக்கு கொண்டுவரப்பட் டுள்ளது. இனி அரசு ஊழி யர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் உத்திரவாதமுள்ள ஓய்வூதியம் இல்லை என்ற நிலையோடு ஊழியர்களி டையே பாகுபாட்டையும் உருவாக்கியுள்ளது. நிதி நிலைக்குழுவின் முக்கிய மான பரிந்துரையை மத்திய அரசு ஏற்கமறுத்து 26சத வீதம் அந்நிய முதலீட்டிற்கு வழி வகை செய்துள்ளது. தற் போது நடைமுறையுள்ள ஓய்வூதியம் போராடி பெற்ற வை. மற்ற பொதுத்துறை யில் அந்நிய முதலீடுகள் என் றால் பணியாற்றிய பின்னரே லாபம் அடைய முடியும். ஆனால் ஓய்வூதிய துறையில் நிதி நேரடியாக கிடைக்கும் போது எளிய முறை லாபம் ஈட்ட அந்நிய நாட்டு நிதி நிறுவனங்களின் ஆணை யினை ஏற்றும் மத்திய அர சின் தற்போதைய பொரு ளாதார சிக்கலில் இருந்து மீளவும் ஓய்வூதியர்களை யும் இந்த நிதியினையும் பலி கடாவாக எத்தனித்துள்ளது.தேசநலன்களை பிர தான கொள்கைகளாக கொண்ட இடதுசாரிக் கட்சிகள் உள்பட சில கட்சி கள் எதிர்வரும் அபாயத்தை அறிந்து எதிர்ப்பு தெரிவித் தும் மத்தியில் ஆள்வோர் உணர மறுத்தனர்.

                            இன்றும் 3 மாநிலங்களில் இந்த புதிய ஓய்வூதிய மசோதா சட்ட மாகாத நிலையில் தமிழக முதல்வரும் தேர்தல் காலத் தில் ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி பயன ளிக்கக்கூடிய ஓய்வூதிய திட் டத்தை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக் கிறோம். தவிர தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங் கங்களின் கூட்டமைப்பின் மாநில மைய அறைகூவ லின்படி எதிர்வரும் 20.9.2013 அன்று தமிழகம் முழு வதும் அனைத்து மாவட் டங்களிலும் காலை 10 மணி யளவில் புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவிற்கு நாடா ளுமன்றம் ஒப்புதல் வழங் கியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தும், அனைவருக் கும் பழைய ஓய்வூதிய திட் டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற முழக்கங் களோடு பெரும் திரள் ஆர்ப் பாட்டம் நடத்திட கூட்ட அமைப்பின் மாநிலத் தலை வர் என்.எல்.ஸ்ரீதரனும், பொதுச் செயலாளர் எஸ். ஜெகதீசனும் அறைகூவல் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment