Friday 13 September 2013

புதிய கேள்வித்தாள் குறித்து சி.இ.ஓ., முடிவெடுக்கலாம்


             மழை காரணமாக, குறிபிட்ட சில மாவட்டங்களில், விடுமுறை அறிவித்தால், அந்த மாவட்டங்களில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிய கேள்வித்தாள் தயாரித்து, தேர்வை நடத்துவது குறித்து, சி...,க்களே முடிவெடுத்து,
செயல்படுத்தலாம் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும், பரவலாக மழை பெய்து வருகிறது. வட மாவட்டங்களில், விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டங்களுக்கு, கலெக்டர்கள், விடுமுறை அறிவிக்கின்றனர். தற்போது, பள்ளிகளில், அனைத்து வகுப்புகளுக்கும், காலாண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில், பிற வகுப்புகளுக்கான தேர்வு, பெரிய பிரச்னையை ஏற்படுத்தாது என்றாலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வில், பாதிப்பு ஏற்படுகிறது. இவர்களுக்கு, மாநில அளவில், பொதுத் தேர்வாக நடப்பதால், ஒரு மாவட்டத்தில், விடுமுறையும், பக்கத்து மாவட்டத்தில், தேர்வு நடப்பதுமாக இருக்கிறது. இதனால், விடுமுறை விடப்படும் மாவட்டங்களில், மீண்டும், புதிய கேள்வித்தாளைத் தயாரித்து, தேர்வை நடத்த வேண்டிய நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளனர். எனினும், இந்த விவகாரத்தில், பள்ளி கல்வித் துறையிடம் கேட்க வேண்டுமா, தேர்வுத் துறையிடம் கேட்க வேண்டுமா என, தெரியாமல், தவித்து வருகின்றனர்.

                        இந்த குழப்பம் குறித்து, தேர்வுத் துறை வட்டாரம் அளித்த விளக்கம்: எங்களிடம், தேவையான அளவிற்கு, வெவ்வேறு கேள்வித்தாள்கள், தயாராக உள்ளன. சி...,க்கள், எங்களிடம், புதிய கேள்வித்தாளைக் கேட்டால், வழங்குவதற்கு தயாராக உள்ளோம். அவர்களாகவே, புதிய கேள்வித்தாளைத் தயாரித்தும், தேர்வை நடத்திக் கொள்ளலாம். அதில், எந்த பிரச்னையும் கிடையாது.இவ்வாறு, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment