Tuesday, 10 September 2013

தமிழகத்தில் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்துக முதல்வருக்கு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் வேண்டுகோள்


            தேர்தலின் போது வாக் குறுதி அளித்தபடி புதிய பென்சன் மசோதாவை நடைமுறைப்படுத்தாமல் வரையறுக்கப்பட்ட ஓய்வூ தியத் திட்டத்தை செயல் படுத்த தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளிகல் லூரி
ஆசிரியர்சங்கம்வேண் டுகோள் விடுத்துள்ளது. சங்கத்தின் பொதுச செயலாளர் என்.கிருஷ்ண சாமி விடுத்துள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது, 4-9-13 அன்று மக்கள வையில் புதிய பென்சன் மசோதா நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இதன் மூலம் உத்தரவாதப்படுத்த ப்பட்ட ஓய்வூதியம் இல்லை என்பது உறுதியாகிவிட் டது. இது ஒரு அபாயகர மான முடிவு. இந்த மசோதா ஆசிரியர்அரசு ஊழியர்தொழிலாளர் விரோத மசோதாவாகும். வரையறுக் கப்பட்ட ஓய்வூதியம் போ ராடிப் பெற்ற உரிமை. இதைப் பறிப்பதை எக்கார ணம் கொண்டும் தமிழ்நாடு பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கம் அனுமதிக்காது.
                       இம் மசோதாவை நிறைவேற் றக்கூடாதென்று 2004 முதல் போராடி வருகிறோம். அபாயகரமான இம்மசோ தாவை நிறைவேற்றிய மத் திய அரசிற்கு எங்களது கண் டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.புதிய ஓய்வூதியத் திட் டம் உலக வங்கியில் முன் மொழியப்பட்ட போது, “இது ஒரு அபாயகரமான முடிவென்றுஅங்குள்ள சில நல்லுள்ளங்கள் தெரி வித்ததை உலக வங்கி பொ ருட்படுத்தவில்லை.இந்திய தொழிலாளர் வர்க்கங்கள் மற்றும் இடது சாரி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரின் எதிர்ப்பையும் மீறி இம்மசோதா நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இந்த மசோதா மீது நடை பெற்ற விவாதத்தின் போது மத்திய நிதியமைச்சர் . சிதம்பரம் இம்மசோதா நிறைவேற்றப்படுவதால் ஊழியர்கள் பலனடைவார் கள் என்றும் வரையறுக்கப் பட்ட ஓய்வூதியத்தை எந்த ஆபத்தும் இருக்காது என் றும் கூறியிருக்கிறார்.2003ம் ஆண்டு இந்த மசோதா சட்டமாகாமல் நிர்வாக உத்தரவின்போரில் நடைமுறைக்கு வந்தபோதுமேற்கு வங்கம்கேரளம்திரிபுரா ஆகிய மாநிலங்கள் இந்த நிர்வாக உத்தரவினை நடைமுறைப்படுத்த முடி யாதென்றும் வரையறுக்கப் பட்ட ஓய்வூதியமே இந்த மாநிலத்தில் தொடரும் என்றும் உறுதியாக முடி வெடுத்தனர்.

                          பின்னர் மகா ராஷ்டிரா மாநிலத்தில் ஏற் பட்ட எதிர்ப்பின் காரண மாக வரையறுக்கப்பட்ட ஓய்வூதியமே இம்மாநிலத் திலும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.தமிழக முதல்வர் சென்ற தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக தமிழகத்தில் புதிய பென்சன் திட்டம் கைவிடப்பட்டு வரையறுக் கப்பட்ட ஓய்வூதியமே நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தார். அவரது வாக்குறுதியினை நிறை வேற்றும் வகையில் ஏற்கன வே குறிப்பிடப்பட்ட நான்கு மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தை நடை முறைப்படுத்த தமிழக முதல் வர் தக்க நடவடிக்கை எடு த்து ஆசிரியர்அரசு ஊழி யர் மற்றும் அனைத்துத் தொழிலாளர் ஓய்வூதியர் களின் முதுமைக் கால நலன் காக்க வேண்டுமென்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர் சங்கம் வேண்டுகிறது என்று அறிக்கையில் கூறியிருக்கி றது.

No comments:

Post a Comment