பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில், புதிய விடைத்தாள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. செப்., 23 முதல் நடக்கும் தனி தேர்வுகளில், மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில், இவற்றை தேர்வுத்துறை வழங்குகிறது. பொதுத் தேர்வுகளில், தற்போது வழங்கப்படும்
விடைத்தாளில், முதல் பக்கத்தில், மாணவர் பெயர் உட்பட பல்வேறு விவரங்கள், கையால் எழுதி நிரப்பும் வகையில் இருந்தது. தற்போது, முதல் பக்க வடிவமைப்பு முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, "பார்கோடிங்' முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் மாணவர் பெயர், தேர்வு எண், மையம், போட்டோ உட்பட விவரங்கள், "பிரின்ட்' செய்யப்பட்டு உள்ளது.
எழுதிய மொத்த பக்கங்கள், வினாத்தாள், "சீரியல்' எண் மட்டுமே மாணவர்களால் நிரப்பும் வகையில், அமைக்கப்பட்டு உள்ளது. விடைத்தாள் திருத்திய பின், முதல் பக்கத்தில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண் இதுவரை, எண்ணால் மட்டுமே எழுதப்படும். புதிய வடிவமைப்பில், எழுத்தாலும் குறிப்பிட வேண்டும். இதுதவிர, ஆசிரியர்கள் கையால் எழுதும் அனைத்து, "பார்மேட்'களும், "பிரின்ட்' முறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. "பார்கோடிங்' முறையால், விடைத்தாள் திருத்தும்போது, "டம்மி' எண் வழங்கும் முறையும் ரத்து செய்யப்பட உள்ளது. விடைத்தாள் திருத்தப்பட்டவுடன், மாணவரின் மதிப்பெண் உடனடியாக ஒருங்கிணைந்த, "டேட்டா சென்டரில்' பதிவாகிவிடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment