Friday 13 September 2013

தலைமை ஆசிரியர்களுக்கு ‘டைஸ்’ விண்ணப்பம் பூர்த்தி செய்ய வீடியோ கான்பிரன்சிங் மூலம் விளக்கம்


                  ‘டைஸ்விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறை குறித்து நேற்று தேசிய அளவில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் மாவட்ட தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம்
டைஸ்‘ (மாவட்ட கல்வி தகவல் அமைப்பு) சார்பில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி ¬ லமை ஆசிரியர்களுக்கு ஞான தர்சன் அலைவரிசை மூல மாகடைஸ்விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்படும். இதில் சந்தேகங்கள் இருந்தால் அதற்கும் வீடியோ கான்பிரன்சிங் முறையில் விளக்கம் அளிக்கப்படும். கடந்த 6ம் தேதி இந்தி மொழியில் இந்நிகழ்ச்சி நடந்தது

                 நேற்று காலை 10 மணி முதல் தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள தலைமை ஆசிரியர்கள் புரிந்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை டெல்லியிலிருந்து அருண் மேத்தா அளித்தார். கோவை மற்றும் திருப்பூர் சேர்ந்த 22 வட்டார வள மையங்களில் 3 ஆயிரத்து 75 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வது குறித்த விளக்கத்தினை பெற்றனர். இதன் மறு ஒளிப்பரப்பு வரும் 25ம் தேதி நடக்கிறது.

No comments:

Post a Comment