Monday, 2 September 2013

''தாய்'' திட்டத்தின் கீழ் பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு உத்தரவு



              தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு: தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் (தாய்) மூலம் அனைத்து கிராமங்களிலும்
தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக குடிநீர் தேவைக்கான கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. மேலும் கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் பட்டியலிட்டு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலரை அணுகி பெற வேண்டும் என முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். அனைவருக்கும் கல்வி இயக்கத்துடன் இணைந்து வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தை மாதம் தவறாமல் நடத்த வேண்டும் என உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மாவட்ட அளவில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தி பள்ளி மேம்பாட்டுக்கு டிஇஓக்கள் முனைப்பு காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment