Monday, 24 June 2013

கால்நடை அறிவியல் படிப்பில் சேர ரேங்க் பட்டியல் வெளியீடு ஜூலை 4–வது வாரத்தில் கலந்தாய்வு

கால்நடை அறிவியல் படிப்பில் சேருவதற்கான ரேங்க் பட்டியல் நேற்றுவெளியிடப்பட்டதுகலந்தாய்வு ஜூலை 4–வது வாரத்தில்நடைபெறுகிறதுதமிழ்நாடு  கால்நடை மருத்துவஅறிவியல் பல்கலைக்கழகத்தின் தேர்வுக்குழு 
தலைவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ரேங்க் பட்டியல்
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பி.வி.எஸ்சிஅண்டுஏ.எச்.) உணவு தொழில்நுட்பம் (பி.டெக்.–எப்.டி.), கோழியின  உற்பத்திதொழில்நுட்பம்  (பி.டெக்.–பி.பி.டி.),தமிழ்நாடு மீன்வளபல்கலைக்கழகத்தின்  மீன்வள  அறிவியல் (பி.எப்.எஸ்சி.) ஆகியஇளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தமாணவர்களுக்கு ரேங்க் பட்டியல் இணையதளத்தில் (www.tanuvas.ac.in )வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வு

மாற்றுத்திறனாளிகள்விளையாட்டு வீரர்கள்முன்னாள்படைவீரர்களின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர்களுக்கானரேங்க் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்கலந்தாய்வு ஜூலை மாதம்4–வது வாரத்தில் நடைபெறும்கலந்தாய்வில்  கலந்துகொள்வது பற்றியஅழைப்புக்கடிதம் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment