Friday, 28 June 2013

சட்டப் படிப்புக்கு ஜூலையில் கலந்தாய்வு



          சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூலை, இரண்டாம் வாரத்தில் துவங்க உள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய, ஏழு
இடங்களில், அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், பி.., பி.எல்., ஐந்தாண்டு சட்டப் படிப்பும், பி.எல்., மூன்றாண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது. ஐந்தாண்டு சட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் முடிவடைந்த நிலையில், பி.காம்., பி.எல்., (ஹானர்ஸ்), பி.., பி.எல்., (ஹானர்ஸ்) உள்ளிட்ட படிப்புகளுக்கான, "கட்-ஆப்" மதிப்பெண் மற்றும் தேர்வானோர் பட்டியல், பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
                     
இதுகுறித்து, சட்டப் பல்கலைக் கழக பதிவாளர் சங்கர் கூறியதாவது: ஐந்தாண்டு பி.., பி.எல்., சட்டப் படிப்பிற்கான, தரவரிசை பட்டியல் விரைவில் வெளியிடப்படும். மூன்றாண்டு பி.எல்., சட்டப் படிப்பிற்கு உள்ள, 1,262 இடங்களுக்கு, 4,000 விண்ணப்பங்களும், பி.எல்., (ஹானர்ஸ்) சட்டப் படிப்பில் உள்ள, 60 இடங்களுக்கு, 400 விண்ணப்பங்களும் விற்பனையாகி உள்ளன. இப்படிப்புக்கு, ஜூலை, 10ம் தேதி வரை விண்ணப்பம் வினியோகிக்கப்படும். ஜூலை, இரண்டாம் வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்க உள்ளது. இவ்வாறு, சங்கர் கூறினார்
.

No comments:

Post a Comment