Sunday 30 June 2013

பள்ளி மாணவர்களுக்கு ரோபோ போட்டி


                        பள்ளி மாணவர், "இளம் விஞ்ஞானி விருது" பெற தேசிய, "ரோபோ தொழில்நுட்பம்" போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது. ரோபோ தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விஞ்ஞானிகளாக உருவாக்கவும், "யோட்டா
ஈவென்ட்ஸ்" நிறுவனம், பள்ளி மாணவர்களிடையே, தேசிய ரோபோ தொழில்நுட்ப போட்டியை நடத்துகிறது. நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். சென்னை ..டி., மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள், ரோபோ தொழில்நுட்பம் குறித்து வழிகாட்ட உள்ளனர். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, "இளம் விஞ்ஞானி விருது" வழங்கப்படுகிறது.

                                     போட்டியை துவக்கி வைத்து, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் கூறியதாவது: உலகளவில் தொழிற்சாலைகள், மருத்துவம், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பல துறைகளில், ரோபோக்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில், அதிகளவில் ஊக்குவிப்பு, வழிகாட்டு இல்லாததால், ரோபோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, குறைவாக உள்ளது. உலகளவில், ரோபோ தொழில்நுட்பத்துக்கு, 45 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால் இந்தியாவில், 450 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்படுகிறது. இந்தியாவில் விழிப்புணர்வு அதிகரித்தால், பல துறைகளில் ரோபோக்களை உபயோகிக்க முடியும். இதனால் செலவு குறைவதுடன், செயல் திறனும் அதிகரிக்கும். இவ்வாறு, ராஜாராம் கூறினார்.  பள்ளி மாணவர்களுக்கு, ரோபோ தொழில்நுட்பம் குறித்த அறிவை, அமெரிக்க தூதரகம் வழங்க உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள்www.yottaevents.com என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment