Sunday 30 June 2013

எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிகற்றல் முறை தொடர் பயிற்சி

                            எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்றல் முறை வலுவூட்டல் பயிற்சி நடந்தது.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இக்கம் மூலம் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி
கற்றல் முறையிலும் 6-8ம் வகுப்பு குழந்தைகளுக்கு படைப்பாற்றல் கல்வி முறையிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது.எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்றல் அட்டைகளில் செய்துள்ள சிறிய மாறுதல்கள் பற்றியும், வளரறி மதிப்பீடு பற்றியும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் பாளை பிளாரன்ஸ் சுவைன்சன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.பயிற்சி முகாமை அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரி பாய் தலைமை வகித்து துவக்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் சோபியா, செல்வின், ஆசிரிய பயிற்றுனர் விக்டர் ஜான்சன், சுந்தர், ஜெயக்குமார், மோகனன், ஆசிரியர் குமார் பயிற்சி அளித்தனர்.இதில் 245 ஆசிரிய பயிற்றுனர்கள் பயிற்சியாளர்களாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சகாய ஜூடி செய்திருந்தார்.தொடர்ந்து 6ம் தேதி மாவட்டத்தில் 40 சதவீத ஆசிரியர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குறு வள மையங்களில் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment