Thursday, 27 June 2013

'ஆசிரியர் பணி ஒரு தொழில் அல்ல!''


                            ''உலகம் முழுவதும் ஆரம்ப கல்வி கற்பிக்கவே 1.7 மில்லியன் ஆசிரியர்கள் இன்னும் தேவைப்படுகிறார்கள். பல நாடுகளை சேர்ந்த பல ஆசிரியர்களை நான் பார்த்துவிட்டேன். பலர் ஆசிரியர் பணியை ஒரு தொழிலாக,
வேலையாக தான் பார்க்கிறார்கள். சம்பளத்திற்கானபணி அது, அவ்வளவே. ஒரு மருத்துவரை போல, வழக்கறிஞரை போல, நான் ஒரு ஆசிரியர் என்றே வாழ்கிறார்கள்எவ்வளவு பெரிய தவறான கண்ணோட்டம் அது. நாளைய சமுதாயத்தையே அன்பும் அறிவும் கலந்து கட்டும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அதை உணராமலேயே பலர் இயங்குகிறார்கள். பல நாடுகளில் ஆசிரியர்களுக்கு ஊதியமும் சரிவர கொடுக்கப் படுவதில்லை. ஆசிரியர்கள் பலர் வறுமையில் வாடுகிறார்கள். குழந்தைகளின் வாழ்க்கைக்கு தாய் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆசிரியரும் முக்கியம். உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு ஆசியர்கள் இல்லை. 114 நாடுகளில் இந்த கவலை அதிகமாக இருக்கிறது. பல நாடுகளில் 1,815 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் தான் இருக்கிறோம். 2011 ஆம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் 21% ஆசிரியர்கள் தகுதி இல்லாதவர்கள்''

-பான் கி மூன் (.நா பொது செயலாளர்)

No comments:

Post a Comment