பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டில்
நடைபெற்றது. மாவட்டச் செயலர் முத்துராமசாமி தலைமை வகித்தார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஆறாவது ஊதியக் குழுவில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்களை அமல்படுத்த வேண்டும்.
தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக்காலத்தையும் கணக்கிட்டு தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கைத்தொழில் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை நியமன நாள் முதல் பணிவரன் முறைப்படுத்த வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் தமிழாசிரியர், வரலாறு பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment