இடைநிலை ஆசிரியர்களின் ஆரம்ப ஊதிய விகிதத்தை உயர்த்த வேண்டும் என கல்வி அமைச்சரிடம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வைகை செல்வனிடம்
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில பொதுச் செயலர் தாஸ் 41 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.அதன் விவரம்:அங்கீகாரம் இல்லாத கல்விப் பள்ளிகள் இயங்கி வந்ததை ரத்து செய்த முதல்வர் ஜெ.,வுக்கு நன்றி. இடைநிலை ஆசிரியர்களின் ஆரம்ப ஊதிய விகிதம் 5,200 என்பதை 9,300 என நிர்ணயித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.ஏழு ஆண்டுகளில் தேர்வு நிலை 14 ஆண்டுகளில் சிறப்பு நிலை, 20 ஆண்டுகளில் உயர்சிறப்பு நிலை என ஏற்படுத்திட கேட்டுக் கொள்கிறோம். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வில் பத்தாம் வகுப்பு முடித்து ஆசிரியர் பட்டயம் பெற்றவர்கள் பட்டயக்கல்வித் துறையை பிளஸ் 2விற்கு இணையாகக் கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும்.அண்மைப் பள்ளிக்கூட திட்டதை அமல்படுத்தி, வேன் வழியில் சென்று படிக்கும் மாணவர்கள் படுகொலை செய்யப்படுவதை தடைப்படுத்த வேண்டும்.
மனுவை பெற்ற அமைச்சர் கோரிக்கைகள் மீது ஆலோசனை செய்து தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment