ஓ.சௌதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், பெற்றோர்கள், குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர். பள்ளிபாளையம் அருகே, ஓ.சௌதாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தற்போது, பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவ சேர்க்கைக்கு பள்ளியில், 1,000 முதல், 3,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டுள்ளனர். அதற்கு, அவர் முறையான பதில் அளிக்கவில்லை.தொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால், மக்கள், குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரனிடம் கேட்ட போது, "பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. முறையாக மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது," என்றார்.
No comments:
Post a Comment