ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வுக்கு, இதுவரை, 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கின்றன. இதற்கான விண்ணப்பங்களை, கடந்த, 17ம் தேதியில் இருந்து, டி.ஆர்.பி.,
வழங்கி வருகிறது. விண்ணப்பங்களை வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்கவும், ஜூலை, 1 கடைசி நாள். இதற்கு இன்னும், இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இந்நிலையில், இதுவரை, 7.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருப்பதாகவும், 4.8 லட்சம் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்த நிலையில், திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று மாலை தெரிவித்தன.
கடைசி நாளன்று, பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, 5.5 லட்சம் முதல், 6 லட்சம் வரை உயரலாம் என, எதிர்பார்ப்பதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. முதுகலை ஆசிரியர் தேர்வு : ஜூலை, 21ல் நடக்கும், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 654 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான, "ஹால் டிக்கெட்', அடுத்த வாரத்தில், www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது. "தேர்வர்கள், வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படாது;அனைவரும், இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்' என்று, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment