ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஒரே நேரத்தில் பி.எட்., பயிற்சிக்காக, விடுப்பு எடுத்து செல்வதால், மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. ஊராட்சி ஒன்றிய,
நகராட்சி தொடக்க, நடுநிலை பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதனால், கிராமப்புற பள்ளிகள் மூடப்படும் நிலை உள்ளது. இப்பகுதியில், பணியாற்றும் பட்டய பயிற்சி முடித்த ஆசிரியர்கள், பணியில் இருந்து கொண்டே, பி.எட்., படிப்பை அஞ்சல் வழியில் படித்து வருகிறார்கள். அவர்கள் பயிற்சிக்காக, ஒரு மாதம் விடுப்பு எடுத்து செல்ல் உள்ளனர். இதனால், மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாமல், கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, பள்ளி வேலை நாட்களில், துறை வாரியான பயிற்சிகளுக்கு, ஆசிரியர்களை அனுப்புவதால், கல்வி தரம் பாதிக்கப்படும் எனக்கூறிய ஆசிரியர்களே, ஒரு மாதம் விடுப்பு எடுத்து செல்வதால், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர். இப்பிரச்னைக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென, தொடக்க கல்வித்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் விரும்புகின்றனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சங்கர் கணேஷ் கூறுகையில்,"" பி.எட்., பயிலும் ஆசிரியர்களை, அவர்கள் பணியாற்றும் நடுநிலைப்பள்ளியிலேயே, பயிற்சி பெற அனுமதிக்க வேண்டுமென, அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். இவ்வாறு செய்தால், மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள்,'' என்றார்.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராமச்சந்திரன் கூறுகையில்,"" மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, நடுநிலை பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு, அதே பள்ளியில் பி.எட்.,பயிற்சியும், ஆரம்ப பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பயிற்சி வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment