Thursday, 27 June 2013

மாணவ - மாணவியர் விடுதிகள்: முதல்வர்



                         ரூ.30 கோடியே 98 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதிகள், கூடுதல் வகுப்பறைகள் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதுகுறித்து
தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, மயிலாப்பூர், காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம், திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர், வேலூர் மாவட்டம் வேலூர் மற்றும் குடியாத்தம், விழுப்புரம் மாவட்டம், புதுப்பட்டி, விருகாவூர் மற்றும் விக்கிரவாண்டி, கடலூர் மாவட்டம் மேலவன்னியூர், திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், தேவிகாபுரம், நம்மியம்பட்டு மற்றும் தானிப்பாடி, சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி மற்றும் தீர்த்தமலை, நாகப்பட்டினம் மாவட்டம் மாதானம் மற்றும் கொள்ளிடம், பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி, வேப்பூர், எரையூர் மற்றும் கூத்தூர், கரூர் மாவட்டம் கரூர் மற்றும் எலவனூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி மற்றும் கொளக்குடி, திண்டுக்கல் மாவட்டம் பழனி, விருதுநகர் மாவட்டம் சுந்தரராஜபுரம், மதுரை மாவட்டம் ஒத்தகடை, அலங்காநல்லூர் மற்றும் சத்திரப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் மற்றும் சங்கரன்கோயில், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, ஸ்ரீவைகுண்டம் மற்றும் கே. கைலாசபுரம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை ஆகிய 41 இடங்களில் 20 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள்; ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை சிறப்பாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் வகையில் வேலூர் மாவட்டம் குரும்பேரி, குப்பிடிசாத்தம் மற்றும் கிளைவ் பஜார், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர், மதுரை மாவட்டம் பொதும்பு மற்றும் அட்டைப்பட்டி, இராமநாதபுரம் மாவட்டம் மலையான் குடியிருப்பு, திருநெல்வேலி மாவட்டம் கே.ஆலங்குளம், கன்னியாகுமரி மாவட்டம் பத்தறை ஆகிய 9 இடங்களில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 சமுதாயக் கூடங்கள்; காஞ்சிபுரம் மாவட்டம் ஒழலூர், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், வேலூர் மாவட்டம் ஆயல் மற்றும் மகமதுபுரம், கன்னியாகுமரி மாவட்டம் கலிங்கராஜபுரம் அகிய 5 இடங்களில் 1 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டடங்கள்; காஞ்சிபுரம் மாவட்டம் இரும்பேடு, திருவள்ளூர் மாவட்டம் மிட்டனமல்லி, வேலூர் மாவட்டம் பில்லாந்திப்பட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருத்தலையூர், துறையூர் மற்றும் கண்ணனூர், கரூர் மாவட்டம் சனப்பிரட்டி, தஞ்சாவூர் மாவட்டம் முத்துவீர கண்டியம்பட்டி மற்றும் நல்லாடை, திருநெல்வேலி மாவட்டம் நல்லம்மாள்புரம் ஆகிய 11 ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், திறந்தவெளி அரங்கம், சுற்றுச்சுவர், கழிவறை மற்றும் குடிநீர் வசதி ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் மல்லியம்பத்து மற்றும் திருத்தலையூர் வடக்கு, நாகப்பட்டினம் மாவட்டம் பிராந்தியன்கரை, சிவகங்கை மாவட்டம் பாட்டம், திருநெல்வேலி மாவட்டம் கே.சி.பழவூர் ஆகிய 5 இடங்களில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் 2 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிமெண்ட் சாலை, கழிவுநீர் வடிகால் அமைப்பு, பல்நோக்கு மையக் கட்டடம் மற்றும் குடிநீர் வசதி ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் என மொத்தம், 30 கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ மாணவியர் விடுதிகள், மலைவாழ் மாணவர் விடுதி, சமுதாயக் கூடங்கள், கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலாளர், ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர், தாட்கோ மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment