Friday 14 June 2013

பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 24-ல் தொடக்கம்


              பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 31-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த மாணவர்களுக்கான
மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 20-ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. ஜூன் 20-க்குள் புத்தகங்கள்: பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களுக்கும் சேர்த்து, மொத்தம் 1 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருவதாக பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் 20-ஆம் தேதிக்குள் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான இலவசப் புத்தகங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு விடும்.

                         அதேபோல், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் 22 கிடங்குகளுக்கும் அனுப்பப்பட்டுவிடும். மெட்ரிக் பள்ளிகள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும். பள்ளிகள் தொடங்கும் தினத்தில் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் கிடைத்துவிடும். அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் கிடைத்தவுடன், ஜூலை 15-ஆம் தேதி முதல் சில்லறை விற்பனையில் புத்தகங்கள் கிடைக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராகிறவர்களும் பாடப் புத்தகங்களை வாங்கிச் செல்வதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் சில்லறை விற்பனையில் கிடைக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment