Wednesday, 12 June 2013

எம்.பி.பி.எஸ்., ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் எடுத்து 7 பேர் முதலிடம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்படிப்புகளில் சேர சுமார் 29ஆயிரம் மாணவர்கள்  விண்ணப்பித்துள்ளனர்இந்தமாணவர்களுக்கான ரேண்டம் எண் சமீபத்தில் வெளியிடப்பட்டது.இதையடுத்து இன்று கீழ்ப்பாக்கத்தில் 
மருத்துவ கல்விஇயக்குனரக அலுவலகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது.அமைச்சர் வீரமணி ரேங்க் பட்டியலை வெளியிட்டார். அதில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகள் பெயர்  விவரங்களை  அவர் அறிவித்தார்.அவர் கூறியதாவது:-
மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 29 ஆயிரத்து 569விண்ணப்பங்கள் பெறப்பட்டனஇதில் 616 மனுக்கள்நிராகரிக்கப்பட்டன.28 ஆயிரத்து 785 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டனஇதில் 10 ஆயிரத்து 182 பேர்மாணவர்கள். 18 ஆயிரத்து 603 பேர் மாணவிகள்ரேங்க்பட்டியலில் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் எடுத்து 7 பேர்முதலிடத்தில் உள்ளனர்.
அவர்கள் விவரம் வருமாறு:-
1. எஸ்.அபினேஷ் - திண்டுக்கல்
2. பரணீதரன் - திருக்கோவிலூர்
3. பழனிராஜ் - திருசெங்கோடு
4. எஸ்.தினேஷ் - தர்மபுரி
5. கே.ரவீனா-ஊத்தங்கரை
6. நந்தினி - திருப்பத்தூர்
7. ஜெயஓவியா -காட்பாடி
199.75 கட்-ஆப்பை 3 பேர் பெற்றுள்ளனர்.
1. முத்து மணிகண்டன் - ஆவடி
2. விக்னேஷ் - திருப்பூர்
3. ஹேம்நாத்-கிருஷ்ணகிரி

கவுன்சிலிங் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்19-ந்தேதி தொடங்கி  நடைபெறும்முன்னதாக 18-ந் தேதிசுதந்திர போராட்ட  வீரர்களின்  வாரிசுமாற்றுதிறனாளிகள்விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்புபிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிநடைபெறும்.இந்த ஆண்டு 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள1823 எம்.பி.பி.எஸ்இடங்கள் முதல் கட்டமாகநிரப்பப்படும்பிறகு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதிகடிதம் வந்ததும் கூடுதலாக 285 இடங்களுக்குமாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர் வீரமணி கூறினார்.

No comments:

Post a Comment