Saturday 15 June 2013

எம்.பி.பி.எஸ். தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு 30 நாள்களுக்குள் துணைத் தேர்வு நடத்த வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

                     எம்.பி.பி.எஸ்முதலாம் ஆண்டு தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்குதேர்வு முடிவு வெளியான 30 நாள்களுக்குள் துணைத் தேர்வைநடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக 
கே.வெற்றிச்செல்வன் உள்ளிட்ட எம்.பி.பி.எஸ்.மாணவர்கள் 14 பேர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.கடந்த 2011-2012 ஆம் கல்வியாண்டில் நாங்கள  எம்.பி.பி.எஸ்படிப்பில்சேர்ந்தோம்முதலாம் ஆண்டுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட்மாதம் நடைபெற்றதுஅந்தத் தேர்வில் நாங்கள் வெற்றி பெறவில்லை.பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகம் துணைத் தேர்வை நடத்தியது.அந்தத் தேர்வில் கலந்து கொண்ட நாங்கள் வெற்றி பெற்றோம்எனினும்2011-2012-ஆம் கல்வியாண்டில் எங்களுடன்  முதலாம் ஆண்டில் சேர்ந்துதற்போது இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்பயிலும் மாணவர்களுடன்சேர்ந்து நாங்களும் இரண்டாம் ஆண்டு பயில அனுமதி மறுக்கப்படுகிறது.இது சரியல்ல.ஆகவேஎங்களுடன் முதலாம் ஆண்டில் எம்.பி.பி.எஸ்.சேர்ந்த அதே அணி மாணவர்களுடன் சேர்ந்து நாங்களும் இரண்டாம்ஆண்டு பயில எங்களை அனுமதிக்குமாறு மருத்துவப்பல்கலைக்கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றுமனுவில் மாணவர்கள் கோரியிருந்தனர்.இந்த மனு மீது தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால்நீதிபதி என்.பால்வசந்தகுமார் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு விசாரணைமேற்கொண்டது.அப்போதுமனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்எம்.ராதாகிருஷ்ணன்ஆகஸ்ட் மாதத் தேர்வில் தோல்வியடைந்தமாணவர்களுக்கு மறு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பல்கலைக்கழகம்துணைத் தேர்வை நடத்தியுள்ளதுஇவ்வளவு கால தாமதமாக தேர்வைநடத்தியது பல்கலைக்கழகம்தானே தவிர இதில் மாணவர்களின் தவறுஎதுவுமில்லைஆகவேதுணைத் தேர்வில் வெற்றி பெற்றமாணவர்களை அவர்கள் அணியைச் சேர்ந்த மாணவர்களுடனேயேஇரண்டாம் ஆண்டு படிப்பு பயில அனுமதிக்க வேண்டும் என்றுவாதிட்டார்.எனினும்இதற்கு பல்கலைக்கழகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர்மாதத்திலேயே தொடங்கி விட்டனபிப்ரவரி மாத்துக்குள் பெரும்பகுதிபாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன.மேலும்ஒவ்வொரு பாடத்திலும் 80 சதவீதம் வகுப்புக்கான வருகைப்பதிவு இருந்தால்தான் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.பிப்ரவரி மாதத் துணைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை அவர்கள்அணி மாணவர்களுடன் சேர்ந்து பயில அனுமதித்தால்வகுப்புக்கானவருகைப் பதிவேடு போதிய அளவு இருக்காதுஇதனால் தேர்வு எழுதமுடியாது என்று வாதிடப்பட்டது.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்பிப்ரவரி மாதத்துணைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை அவர்கள் அணிமாணவர்களுடனேயே இரண்டாம் ஆண்டு பயில அனுமதிக்க முடியாதுஎன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தனர்.எனினும் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் கவுன்சில்ஏற்கெனவே முடிவு செய்துள்ளபடி இனி எம்.பி.பி.எஸ்முதலாம் ஆண்டுதேர்வு முடிவு வெளியான 30 நாள்களுக்குள் துணைத் தேர்வைநடத்தியாக வேண்டும்தேர்வு முடிந்த இரண்டு வாரங்களுக்குள் அதன்முடிவை வெளியிட வேண்டும்.இதன் மூலம்துணைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் அவர்கள்அணியைச் சேர்ந்த மாணவர்களுடனேயே இரண்டாம் ஆண்டு படிப்பைத்தொடருவதற்கான வாய்ப்பை உருவாக்கிட வேண்டும் என்று நீதிபதிகள்தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment