Wednesday 12 June 2013

கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை : அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது



                              அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எவ்விதமான கட்டணமும் வசூலிக்க கூடாது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவர்
களுக்கு அரசின் சார்பில் புத்தகங்கள், நோட்டுகள், சீருடை, செருப்பு, அட்லஸ், ஜாமன்ட்ரி பாக்ஸ், சைக்கிள், லேப்டாப், கல்வி உதவித்தொகை என 14 வகையான உபகரணங்களை இலவசமாக வழங்கப்படுகிறது. இவற்றில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் நிலையில் கடந்த ஆண்டுகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் நோட்டுகள் வழங்குவதாக கூறியும், சிறப்பு கட்டணம் என பெரிய தொகையை வசூலித்து வருகின்றன. மேலும் சில அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்கள் பள்ளிகளில் சைக்கிள் நிறுத்துவதற்கு கூட கட்டணம் வசூலித்து வருகின்றன. இந்த கல்வி ஆண்டிற்காக பள்ளிகள் நேற்று துவக்கப் பட்டுள்ளன.
             பள்ளி துவங்கிய தினமே அனைத்தும் மாணவ, மாணவி யர்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. இந்நிலையில் சில உதவி பெறும் பள்ளிகள் மாணவ, மாணவியரிடம் நேற்று சிறப்பு கட்டணம் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1226 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் உள்ளன, 275 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் படிக்கும் 3லட்சம் மாணவ, மாணவியருக்கு சீருடைகள் முதல் நோட்டுகள், பை உள்ளிட்வை இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்களிடம் கட்டணம் என்ற பெயரில் எந்த தொகையும் வசூலிக்க கூடாது. அரசு உதவி பெறும் பள்ளிகளும் சிறப்பு கட்டணம், நோட்டு விநியோகம் என பணம் வசூலிக்க கூடாது. உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆங்கில கல்வி வகுப்பிற்கு மட்டும் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.50 மேல் வசூலிக்க கூடாது. மாணவர்களிடம் கட்டணம் என்ற பெயரில் வசூலித்தால் பள்ளி தலைமையாசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்
.

No comments:

Post a Comment