Thursday 13 June 2013

அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரிகள் விவரம்: முன்கூட்டியே வெளியிடப்படுமா?


            ஆண்டுதோறும், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு, இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்.சி..,) அனுமதி பெறும் கல்லூரிகள் பற்றிய விவரங்களை, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குவதற்கு முன், மருத்துவ பல்கலை
வெளியிட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. "நடப்பு 2012 -13ம் கல்வியாண்டில், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, எம்.சி..,யின் அனுமதி பெற்றுள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் பெயர் பட்டியல், மருத்துவ பல்கலை இணைய தளத்தில், கடந்த, ஜனவரி, 18ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது" என, இப்பல்கலை பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                        
ஆண்டுதோறும், செப்டம்பர், 30ம் தேதிக்குள், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை முடிவடையும் நிலையில், இப்படிப்பிற்கு அனுமதி பெற்றுள்ள கல்லூரிகளின் விவரங்களை, நான்கு மாதங்கள் கழித்து, வெளியிட்டு பலனில்லை. பிளஸ் 2 முடித்து, உயர் படிப்பில் சேர முயலும் நிலையில், அனைத்து மாணவர்களும், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, கல்லூரிகள், எம்.சி..,யின் ஒப்புதலை பெற்றிருப்பது அவசியம் என்பதை அறிய வாய்ப்பில்லை. இதனால், மாணவர்கள், உரிய அங்கீகாரம் பெறாத கல்லூரிகளில் சேர்ந்து, ஏமாற வாய்ப்புள்ளது. எனவே, ஆண்டுதோறும், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு, எம்.சி..,யின் அனுமதி பெறும் கல்லூரிகள் பற்றிய விவரங்களை, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குவதற்கு முன், மருத்துவ பல்கலை, தம் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்ற கருத்து, மருத்துவ மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


No comments:

Post a Comment