தமிழக தொடக்க கல்வித்துறை சார்பில் நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம்
மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. நேற்று முன்தினம் கலந்தாய்வில் 15 இடங்கள் காலி பணியிடங்களாக காட்டப்பட்டிருந்தன. இதில் நேற்று 10 இடங்கள் மட்டுமே காட்டப்பட்டன. 5 இடங்கள் திடீரென மாயமானது. இதனால் ஆசிரியர்கள் கலந்தாய்வை புறக்கணித்து விட்டு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா நடத்தினர். ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ‘‘இடைநிலை ஆசிரியர்களுக்கான உள்மாவட்ட மாறுதல் முடிவில் 15 காலி பணியிடங்கள் காட்டப்பட்டன. ஆனால், தற்போது வெளிமாவட்ட மாறுதலில் குலையனேரி, கலிங்கப்பட்டி, மருதடியூர், மேலநீலிதநல்லூர், மருதம்புதூர் உள்ளிட்ட 5 இடங்களை மறைத்து விட்டனர். அதை காட்டும் வரை நாங்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள மாட்டோம்‘‘ என்றனர்.தொடர்ந்து முன்னுரிமை அடிப்படையில் காலி பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் அழைக்கப்பட்ட நிலையில் யாரும் கவுன்சலிங் செல்லவில்லை. பின்னர் சென்னையில் இருந்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆசிரியர் சங்கத்தினரிடம் தொடர்பு கொண்டு பணி நிரவல் அடிப்படையில் மீதமுள்ள 5 இடங்களும் நிரப்பப்படும் என உறுதியளித்ததின் பேரில் கலந்தாய்வு துவங்கியது. இதில் 10 காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டன.
No comments:
Post a Comment