Tuesday 18 June 2013

இருமுறை நூறு சதவீதம் பெற்ற பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை



                செல்லியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேவையான ஆசிரியர்கள் இன்றி கடந்த இரு ஆண்டுகளாக மாணவர்கள் நூறுசதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். செல்லியம்பட்டி, கொடுங்குன்றம்பட்டி, ஆலம்பட்டி,
அம்மன்கோயில்பட்டி கிராமங்களைச்சேர்ந்த 200 மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். 2011-12 ம் கல்வி ஆண்டில் ஆங்கில ஆசிரியர் இல்லாமல் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர் 35 பேர்.அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.கடந்த 2012-13ம் கல்வி ஆண்டில் சமூக அறிவியல் ஆசிரியர்கள் இருவர் இல்லாமல் 37 மாணவர்கள் தேர்வு எழுதினர். அனைவரும் தேர்வு பெற்றுள்ளனர்.மாணவி லாவன்யா 449 மார்க் பெற்று பள்ளி முதல் மாணவியாக உள்ளார். பெற்றோர்-ஆசிரியர் கழக,தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: நடுநிலைப்பள்ளி கடந்த 2007ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. முற்றிலும் கிராமப்பகுதி மாணவர் படிக்கும் இப்பள்ளியில் தொடர்ந்து ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வருகிறது.நாங்கள் ஆசிரியர் ஏற்பாடுசெய்து மாணவர்களை தயார்செய்கிறோம்.நூறு சதவீதம் வெற்றி,என்றாலும் ஆசிரியர் இன்றி குறைந்த மார்க்கில் தேர்வு பெறுகின்றனர், என்றார்.

No comments:

Post a Comment