Monday 17 June 2013

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பேரணி



                      22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கரூரில் ஞாயிற்றுக்கிழமை பேரணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் தாந்தோணிமலை அரசு
கலைக்கல்லூரி முன்பு இருந்த தொடங்கிய பேரணிக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் செல்வராசு தலைமை வகித்தார். மாநில இலக்கிய அணி அமைப்பாளர் நன்செய் புகழூர் அழகரசன் மாநில பார்வையாளராக கலந்து கொண்டார். பேரணியில் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 80 சத அகவிலைப் படியில், 50 சதத்தை அகவிலை ஊதியமாக அறிவிக்க வேண்டும், பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து 2003-முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஓய்வு கால வாழ்வாதாரமாக விளங்கிய பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவருக்கும், பணியில் சேர்ந்த நாள் முதலே காலமுறை ஊதியம் வழங்குவதோடு, மொத்த பணிக்காலத்தையும் கால முறை ஊதியம் பெற்ற கணக்கில் சேர்க்க வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களுக்கு தொழிற்சங்க உரிமையை வழங்கிட மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும். முதல் வகுப்பிலிருந்தே அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை புகுத்துவதைக் கைவிட்டு, நடைமுறையிலுள்ள தமிழ் வழிக் கல்வியை தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment