Saturday 8 June 2013

அரசு பள்ளி ஆசிரியர்கள் நன்றாகவே செயல்படுகிறார்கள் முத்து ராஜேந்திரன் வாசகர் கருத்து

ஓவ்வொரு தடவையும் பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் அரசு பள்ளி ஆசிரியர்கள் விமர்சிக்கப் படுகிறார்கள். ஆனால் உண்மையில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சிக் குறைவிற்கு காரணங்களை யாரும் அலசி ஆராய்வதில்லை. ஒரு பள்ளியின் தேர்ச்சி விகிதம் என்பது ஆசிரியர் எடுக்கும்
முயற்சியால் மட்டுமே வருவதில்லை. மாணவர்கள் உழைப்பு, பெற்றோர்களின் அக்கறை , ஆசிரியர்களின் வழிகாட்டுதல் போன்ற அம்சங்களே தேர்ச்சி விகிதத்தை கொடுக்கும். குறைந்த காரணங்கள்.
1. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில் வடிகட்டும் முறையை கடைபிடிக்க முடியாது. வருகின்ற மாணவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சேர்த்துக் கொள்ளவேண்டும்.
2. மாணவர்களை 9 ஆம் வகுப்பு வரை fail பண்ண முடியாது. மேலும் இதுவரை பொதுத்தேர்வு என்று ஒன்று இல்லாததால் பலவகை பட்ட மாணவர்களையும் பத்தாம் வகுப்பில் தான் ஆசிரியர்கள் கையாள வேண்டியுள்ளது.
3. இது அரசு பள்ளிகளுக்கு மட்டுமே உள்ள பிரச்சனை. மாணவர்களை அடிக்கக் கூடாது. திட்டக் கூடாது. எதாவது பிரச்சனை என்றால் பெற்றோர்களை அழைத்தால் அவர்களும் மாணவர்கள் நலன் கருதி ஒரு சிலர் மட்டுமே வருவார்கள்.
4.பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் அரசியல் அடிப்படையில் போய் விட்டதால் அதனாலும் ஒரு பலனும் இல்லை
5. மேலதிகாரிகள் பெரும்பாலும் நேரடியாக மாவட்ட கல்வி அதிகாரியாக தேர்வு செய்யபடுவதால் வெறும் புள்ளி விபரங்களை வைத்து ஆய்வு செய்பவர்களாக இருக்கிறார்களே தவிர உருப்படியான ஆலோசனைகளை தரமுடியாத நிலையில் தான் உள்ளார்கள்.
6 தலைமை ஆசிரியர்கள் தனது பள்ளி சூழ்நிலைக்கு ஏற்ப நிருவகிக்க எந்த சுதந்திரமும் இல்லை.

7. வேண்டுமானால் பிரச்சனைக்கு உரிய சில பள்ளிகளை தரம் உயர்த்தி மாவட்ட கல்வி அதிகாரிகளை தலைமை ஆசிரியர்களாக நியமித்து தேர்ச்சி விகிதத்தை ஒரு சவாலாக ஏற்று உயர்த்த முயலலாம். எல்லாவற்றிக்கும் மேலாக ஆசிரியர் நியமனமத்தில் அரசியல் தலையீடு , ஆசிரியர்களை வேறு பணிகளுக்கு அனுப்புவது, தேவை இல்லாத நடைமுறைக்கு ஒவ்வாத ஆய்வுகள் இவை எல்லாம் உயர்ந்த தேர்ச்சி விகிதம் அரசு பள்ளிகள் அடைய முடியாததற்கு காரணங்கள். இதையும் தாண்டி சில பள்ளிகள் குறிப்பாக சென்னையில் அசோக் நகர், சூளைமேடு அதே போல் விருதுநகர் மாவட்ட பள்ளிகள் உயர்ந்த தேர்ச்சி விகிதங்கள் காட்டியுள்ளன. மொத்தத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பெருமபான்மையானவர்கள் நன்றாகவே பணி புரிகிறார்கள். குறையை எங்கோ வைத்துக் கொண்டு ஆசிரியர்களை குறை சொல்வது சரியல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.

No comments:

Post a Comment