Friday 7 June 2013

பண பலன்கள் வழங்குவதில் காலதாமதம் நீடிப்பு தொடக்க கல்வி ஆசிரியர்கள் கடும் அதிருப்தி - நாளிதழ் செய்தி



               பண பலன்கள் வழங்குவதில் காலதாமதம் செய்யப்பட்டு வருவதால் நெல்லை மாவட்ட தொடக்க கல்வித் துறை ஆசிரிய, ஆசிரியைகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்ட தொடக்க கல்வித் துறை
அலுவலகத்தின் கீழ் நூற்றுக்கணக்கான அரசு துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பணியாற்றி வரும் பல்வேறு ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பண பலன்கள் வழங்குவது தொடர்பான கோரிக்கைககள் சம்பந்தப்பட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் உரிய நேரத்தில் பண பலன்களை பெற முடியாமல் ஆசிரிய, ஆசிரியைகள் திண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு கோரிக்கைக்கும் குறிப்பிட்ட சதவீதம் தொகை என்று சில அலுவலகங்களில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆசிரிய, ஆசிரியைகள் புகார் தெரிவிக்கின்றனர்.
                கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கைகளை குறித்த காலத்தில் எடுக்காவிட்டால் இதுதொடர்பான புகார்களை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினால் சம்பந்தப்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் மீது கடும் நடவடிக்கைகளை கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொள்வதாகவும் புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைமை நிலைய செயலாளர் பாலு கூறும் போது, ""ஆசிரிய, ஆசிரியைகளின் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பகுதி இறுதி தொகை வழங்க கோரி விண்ணப்பித்து பல மாதங்களாகியும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்பளிப்பு ஆணை வழங்குவது இல்லை. இதுதொடர்பாக கலெக்டரிடம் முறையிட்டால் விண்ணப்பத்தை வேண்டுமென்றே திருப்பி அனுப்புகின்றனர். இதுபோன்ற கோரிக்கைகளுக்கு உரிய தொகையை வழங்க அதிகாரிகள் கெடுபிடி செய்வதால் ஆசிரிய, ஆசிரியைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததால் அவர்களின் ஒத்துழைப்புடன் இடமாறுதல் செய்யப்படுகின்றனர். எனவே, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு ஆசிரிய, ஆசிரியைகளின் நீண்ட கால கோரிக்கைகள் குறித்து தீர்வு காணப்பட வேண்டும்'' என்றார். இக்கோரிக்கை தொடக்க கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பபட்டுள்ளது
.

No comments:

Post a Comment