Sunday 9 June 2013

மாணவர்கள் விபரம் சேகரிப்பில் ஆசிரியர் பதவி, பணிநிரவலில், வேறு பள்ளிக்கு மாற்றப்படும் என்பதால் தாமதம்

கம்ப்யூட்டரில் பதிவு செய்யதிரட்டப்படும் மாணவர்களின் விபரங்களைஉறுதி செய்ய ஆசிரியர்கள் தயக்கம் காட்டுவதால்அப்பணியை செய்துமுடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.தமிழகத்தில் உள்ள அனைத்துதனியார்
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்அனைத்து மாணவர்கள்ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் குறித்தவிபரங்களைஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யும் பணிசிலமாதங்களாக நடந்து வருகிறதுஇதில் மாணவர்களின் பெயர்தந்தைபெயர்முகவரிவயதுரத்த வகுப்பு உள்ளிட்ட, 30 வகையான தகவல்கள்பதியப்படுகிறது. சில ஆண்டுகளாக அரசு துவக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகுறைந்து வருவதால்பணிநிரவலில் தங்கள் பணியைகாப்பாற்றிக்கொள்ளபெரும்பாலான ஆசிரியர்கள் போலியாக மாணவர்வருகையை கடைபிடித்து வருகின்றனர்உதாரணமாக தனியார்பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்குதொடர்ந்து அரசுப்பள்ளியிலேயேபடிப்பதாக வருகை பதிவேடு தயார் செய்து விடுகின்றனர்.
இதனால்,30 மாணவர்களுக்கு வருகை பதிவேடு இருக்கும்வகுப்பறையில்உண்மையில்,15 மாணவர்கள் மட்டுமே இருப்பர்.இதனால் அரசின் சலுகைகள் முதல் ஆசிரியர்களின் சம்பளம் வரைவீணாகிறது.தனியார்அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள்அனைத்தும்,ஆன்லைனில் மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்யும் போது,அதில் போலி வருகை பதிவேடு உள்ள மாணவர்களை கண்டுபிடிக்கமுடியும்இதனால் தங்களது ஆசிரியர் பதவிபணிநிரவலில்வேறுபள்ளிக்கு மாற்றப்படும் என்பதால்ஆரம்பம் முதலே ஆன்லைனில் பெயர்பதிவு செய்யும் பணிக்குபல ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.ஆனாலும்கடந்த மார்ச் மாதத்தில் பதிவுகள் செய்து முடிக்கப்பட்டது.இதில், 22 லட்சம் மாணவர்களின்  விபரம்  விடுபட்டிருந்ததுஇதனால்,இரட்டை பதிவு உள்ளிட்ட குளறுபடிகளை சரிபார்த்துஅனைத்துதலைமை ஆசிரியர்களும்கொடுத்துள்ள தகவல்களை மீண்டும் உறுதிசெய்ய கால அவகாசம் வழங்கப்பட்டதுஇந்த அவகாசத்துக்குள்இவற்றை சரிபார்க்காமல்தொடர்ந்து பல தலைமை ஆசிரியர்கள்வேண்டுமென்றே தாமதம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்பள்ளிக்கல்வித்துறையில்ஜூன், 10ம் தேதிக்குள் கொடுத்துள்ள  தகவல்களை உறுதி செய்ய வேண்டும் எனஅனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை அலுவலர்கள்உத்தரவிட்டுள்ளனர்.இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள்கூறியதாவது:போலி வருகை பதிவேடு தயார் செய்த ஆசிரியர்கள் அதைஉண்மையாக்கபள்ளி திறந்தவுடன்மாணவர்களை சேர்த்துஅவற்றைஉறுதிப்படுத்திதங்கள் பணியிடத்தை காப்பாற்றிக்கொள்ள இந்ததாமதத்தை வேண்டுமென்றே செய்கின்றனர்இதனால் பள்ளிதிறக்கப்படும் நாளானஜூன்,10ம் தேதிக்குள் இந்த தகவல்களைஉறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment