Wednesday 12 June 2013

உதவித் தொகை வழங்குவதை கண்காணிக்க இணையதளம்


           தமிழக கல்லூரிகளில் பயிலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த, மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
 உதவித்தொகை உரிய காலத்தில் சென்றடைவதை உறுதி
செய்யவும், திட்டத்தை ஆய்வு செய்யவும், பணி முன்னேற்றத்தினை தொடர்ந்து கண்காணிக்கவும், மின்னாளுமை திட்டத்தின் கீழ், தேசிய தகவல் தொகுப்பு மையத்தால், மென்பொருள் உருவாக்கப்பட்டுwww.escholarship.tn.gov.in என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளதுஇந்த இணையதளம் மூலம், கல்வி உதவித் தொகை கேட்புகளை கல்லூரிகள் அனுப்புவதில் துவங்கி, மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கும் வரையிலான விவரங்களை, அரசு, இயக்குனரகங்கள், கலெக்டர் அலுவலகங்களில், இணையதளம் மூலம், துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும், பயன்பெறும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதையும் கண்காணிக்க முடியும்.

No comments:

Post a Comment