Wednesday 12 June 2013

பொறியியல் பட்டப்படிப்பு ரேங்க் பட்டியல் வெளியீடு: மாணவர் அபினேஷ் முதலிடம்:

                      தமிழ்நாட்டில் 550–க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்பட உள்ளனஇந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 397
பேர் விண்ணப்பித்தனர். என்ஜினீயரிங் விண்ணப்பித்த ஒரு லட்சத்து 89 ஆயிரம் மாணவமாணவிகளுக்கும் கடந்த 5–ந் தேதி கம்ப்யூட்டர் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டதுஇந்த நிலையில், அவர்களுக்கான ரேங்க் பட்டியல் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மாலை வெளியிடப்பட்டது உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் ரேங்க் பட்டியலை வெளியிட்டார்இதில் பொதுப்பிரிவில் நாமக்கல்லை சேர்ந்த மாணவர் அபினேஷ் முதலிடம் பிடித்தார். மாணவர் பரணீதரனுக்கு 2-வது இடம் கிடைத்தது. தொழிற்பிரிவில் கவுதம் முதலிடமும், ஆனந்த் 2-வது இடமும், கவுசிக் 3-இடமும் பெற்றனர்

                              பொறியியல் படிப்புக்கு விண்ணப்பத்தவர்களில் 1,82,633 மாணவ-மாணவிகளின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதில் மாணவர்கள் 1,10,205 பேர், மாணவிகள் 72,428 பேர். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவமாணவர்கள் ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu) தெரிந்துகொள்ளலாம்ரேங்க் பட்டியலை தொடர்ந்து, விரும்பும் கல்லூரியையும், பாடப்பிரிவையும் தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் நடத்தப்படும். முதலில் விளையாட்டு பிரிவினருக்கான கவுன்சிலிங் 17, 18, 19 ஆகிய தேதிகளிலும், மாற்று திறனாளிகளுக்கான கவுன்சிலிங் 20–ந் தேதியும் நடைபெறும். பொது கவுன்சிலிங் 21–ந் தேதி தொடங்கி ஜூலை 30–ந் தேதி வரை நடத்தப்படும்.

No comments:

Post a Comment