Monday 17 June 2013

பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தமிழக ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு



              பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு, தமிழக ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம், திருச்சி அருண் ஹோட்டலில் நடந்தது. மாநில தலைவர் முருகேசன்
தலைமை வகித்தார். அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் காமராஜ், பொருளாளர் இளங்கோ, மகளிர் அணி செயலாளர் தங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விப் பிரிவு துவங்க அரசு உத்தரவிட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. முதல் கட்டமாக தாய்மொழி தமிழில் படிக்கும், 1.5 லட்சம் மாணவர்களை, ஆங்கில வழிக்கல்விக்கு மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். ஐந்தாம் வகுப்பு வரை, தாய் மொழி கல்வி கற்பிக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு பாடமொழியாக மட்டுமே வைக்க வேண்டும். ப்ளஸ் 2 வரை, தமிழ் வழியிலேயே படித்தவர்களுக்கு தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில், 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சியில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மார்க் வழங்கும் முறையை நடைமுறை படுத்த வேண்டும்.
வரும், 20ம் தேதி கல்வி அமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், ஆங்கில வழிக்கல்வியை கைவிட வலியுறுத்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி சுவரொட்டி ஒட்டும் இயக்கம் நடத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட, ஒரு நபர் குழுவின் அறிக்கையை, அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
.

No comments:

Post a Comment