Sunday 9 June 2013

அண்ணாமலை பல்கலை நுழைவுத்தேர்வு: 11,087 பேர் பங்கேற்பு



          சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஜினியரிங் மற்றும் வேளாண்மை படிப்புக்கான நுழைவுத் தேர்வில், 11,087 பேர் தேர்வு எழுதினர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 2013ம்
ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் அதை சார்ந்த படிப்புகளுக்கு, கடந்த 7ம் தேதி, தமிழகத்தில் ஏழு மையங்களில் நுழைவுத் தேர்வு நடந்தது. இதில் 13,500 பேர் பங்கேற்றனர். நேற்று நடந்த, பொறியியல் மற்றும் வேளாண்மை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மட்டும் 4,767 பேர் தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும், 11,087 பேர் நுழைவுத் தேர்வு எழுதினர். இன்று (9ம் தேதி) இன்ஜினியரிங் மற்றும் வேளாண்மை படிப்புக்கான நுழைவுத் தேர்வில், கணிதப் பாடத்திற்கு தேர்வு நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பேர், தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களை, நிர்வாக சிறப்பு அதிகாரி, ஷிவ்தாஸ் மீனா, பதிவாளர் பஞ்சநாதன் மற்றும் சப்-கலெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான பறக்கும் படையினர், ஆய்வு செய்தனர்.

No comments:

Post a Comment