Sunday 9 June 2013

இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை சம்பளத்தை, மாற்றி அமைக்க வேண்டும் - தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

                              "அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் அமல்படுத்தப்படும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்' என, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்
கூட்டணி, கோரிக்கை விடுத்துள்ளது. சங்க பொதுச்செயலர் தாஸ் மற்றும் நிர்வாகிகள், நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: ஆறாவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய, அனைத்து சங்கங்களின் கருத்துக்களையும் கேட்டு, அறிக்கை சமர்ப்பிக்க, தமிழக அரசு, மூன்று நபர் குழுவை அமைத்தது. இந்த குழு, அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தும், அதனை, இதுவரை தமிழக அரசு வெளியிடவில்லை. இந்த அறிக்கையை, உடனடியாக வெளியிட வேண்டும்.இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை சம்பளத்தை, மாற்றி அமைக்க வேண்டும். "பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்' என, கடந்த சட்டசபை தேர்தலின்போது, ஜெயலலிதா தெரிவித்தார்.அந்த அறிவிப்பு, இதுவரை அமலுக்கு வரவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை, மீண்டும் அமல்படுத்த, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment