Monday 17 June 2013

15,000 பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் இன்று முதல் விநியோகம் ஆரம்பம்



             தமிழகத்தில் காலியாக உள்ள சுமார் 15,000 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று தொடங்குகிறது. ஆகஸ்டு 17 மற்றும் 18ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு
நடைபெறும் என கடந்த 22ம் தேதி டிஆர்பி அறிவித்தது. இதன் மூலம் சுமார் 15,000 காலி பணி இடங்கள் நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று (17ம் தேதி) தொடங்குகிறது. இந்த ஆண்டு 7 லட்சம் பேர் தகுதி தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஏற்கனவே அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டு தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளன.
                          
ஜூலை 1ம் தேதி மாலைக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.50, தேர்வுக் கட்டணம் ரூ.500 ஆகும். ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்ப கட்டணமாக ரூ.250 செலுத்தினால் போதும். பணி நியமனத்துக்கு இந்த ஆண்டு புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. முதலில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதன்பிறகு தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். தொடர்ந்து காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை தகுதி தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2, டிகிரி, பிஎட்., மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயார் செய்யப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார். இடைநிலை ஆசிரியர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்
.

No comments:

Post a Comment